திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட நூம்பல் பகுதியில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில், அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டு புதிய ரேஷன் கடையைத் திறந்து வைத்து பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இ- பாஸ் முறை மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி நடைபெற்றுவருகிறது. மேலும், மாநில நிலவரத்தைப் பொறுத்தவரை இ- பாஸ் ரத்து செய்வது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்.
இ-பாஸ் தளர்வு அளிக்கப்பட்டதிலிருந்து வட சென்னையில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. தமிழ்நாடு அரசின் வேலைகளில் 90 விழுக்காடு வேலை தமிழக மக்களுக்கே வழங்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து சட்டம் இயற்றினார் அளிக்கப்பட்டுவரும் வேலைவாய்ப்பு விகிதம் குறைய வாய்ப்புள்ளது.