தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா நெருக்கடியில் அயராது உழைத்த காவலர்களுக்கு நினைவுப் பரிசு! - காவலர்களுக்கு நினைவுப்பரிசு

சென்னை: கரோனா நெருக்கடியில் சிறப்பாகப் பணிசெய்த காவலர்களுக்கு அமைச்சர் பாண்டியராஜன் நினைவுப் பரிசை வழங்கினார்.

கரோனா நெருக்கடியில் அயராது உழைத்த காவல்துறையினருக்கு நினைவுப் பரிசு!
கரோனா நெருக்கடியில் அயராது உழைத்த காவல்துறையினருக்கு நினைவுப் பரிசு!

By

Published : May 22, 2020, 4:43 PM IST

சென்னை ஆவடி தொகுதிக்குள்பட்ட அம்பத்தூர் காவல் மாவட்ட அலுவலகம், ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், திருவேற்காடு உள்பட 10-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் 700-க்கும் அதிகமான காவலர்கள் பணியாற்றுகின்றனர்.

கரோனா நெருக்கடியில் அயராமல் உழைத்த இவர்களை கவுரவிக்கும்விதமாக, அனைத்து காவல் அலுவலகத்திற்கும் நேரில் சென்று ஆவடி சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழ் ஆட்சிமொழித் துறை அமைச்சருமான கே. பாண்டியராஜன் நினைவுப் பரிசை வழங்கினார்.

காவல் துறையினருக்கு நினைவுப் பரிசு!

இதில், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் கபசுரக் குடிநீர் பெட்டி, சோப்பு, சானிடைசர் ஆகியவற்றைத் தாம்பூலத்தட்டில் வைத்து அமைச்சர் வழங்கினார். இது காவல் துறையினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: சென்னையில் மாஸ்க் அணியாதவர்களிடம் 500 ரூபாய் அபராதம் வசூல்!

ABOUT THE AUTHOR

...view details