ஆவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு மீண்டும் வேட்பாளராக பாண்டியராஜன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆவடியில் உள்ள பிரசித்திபெற்ற பச்சையம்மன் ஆலயம், திருமுல்லைவாயல் சிவன் கோவில் உள்ளிட்ட ஆலயங்களில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தேமுதிக கூட்டணியிலிருந்து விலகியுள்ளதால், அதிக தொகுதியில் போட்டியிட அதிமுகவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தேமுதிகவின் வலிமை என்ன என்பதை அறிந்து சீட் வழங்கினோம்.
“தேமுதிக எங்கிருந்தாலும் வாழ்க”-அமைச்சர் பாண்டியராஜன் வாழ்த்து! அதை ஏற்காமல் வேறு பாதையை தேடி சென்றுள்ளனர். "எங்கிருந்தாலும் வாழ்க" என சொல்ல விரும்புகிறேன். அந்த கட்சி அவர்கள் பாதையில் போகட்டும், நாங்கள் எங்கள் பாதையில் செல்கிறோம். அவர்களைவிட மிக வலிமையான பாஜக, பாமக எங்களுடன் உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் அதிமுகவுடன் இருக்கும் என நம்புகிறோம். என்றார்.
இதையும் படிங்க:ஓயாது உழைத்தது வீணானது - அதிருப்தியில் கவுதமி, குஷ்பு ஆதரவாளர்கள்!