தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

5 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கு அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை...! - மாவட்டங்கள் பிரிப்பு

சென்னை: ஐந்து மாவட்டங்கள் புதிதாகப் பிரிக்கப்பட்டதற்கு அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

minister-pandiyarajan-about-local-body-elections

By

Published : Nov 16, 2019, 10:47 PM IST

சென்னை ஆவடி தொகுதிக்குட்பட்ட திருமுல்லைவாயில் சோழம்பேடு பகுதியில் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சுகாதார நிலையம் மற்றும் பருத்திப்பட்டு பகுதியில் ரூ. 1 கோடி செலவில் புதிதாக பூங்கா ஆகியவற்றை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் திறந்து வைத்தார்.

சுகாதார நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

பின்னர் செய்தியாளர்களிடம் பாண்டியராஜன் பேசுகையில், ‘தமிழ்நாட்டில் தலைவர்களுக்கான வெற்றிடம் எதுவும் இல்லை. கடந்த இடைத்தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். அதேபோன்று உள்ளாட்சித் தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர் சந்திப்பு

உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்து தான் மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது என ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுக்கு, மக்கள் நல்வாழ்வை மனதில் வைத்து மட்டுமே புதிய மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது. ஐந்து புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து ஸ்டாலின் எப்படி எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை. இதற்கு அரசியல் காரணம் எதுவும் இல்லை’ என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'அதிமுக ஆட்சியில் இருக்கும் வரை உள்ளாட்சித் தேர்தலை நடத்தாது' - மு.க. ஸ்டாலின் சாடல்!

ABOUT THE AUTHOR

...view details