தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஜிஎஸ்டி நிலுவைத் தொகை சலுகையல்ல தமிழ்நாட்டின் உரிமை'- அமைச்சர் பாண்டியராஜன் - minister pandiarajan

சென்னை: மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை சலுகையல்ல, அது தமிழ்நாட்டின் உரிமை என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பாண்டியராஜன்  ஜிஎஸ்டி நிலுவைத் தொகை  minister pandiarajan  gst amount
'ஜிஎஸ்டி நிலுவைத் தொகை சலுகையல்ல தமிழ்நாட்டின் உரிமை'- அமைச்சர் பாண்டியராஜன்

By

Published : Aug 31, 2020, 8:04 PM IST

சென்னை ஆவடி அடுத்த முத்தா புதுப்பேட்டையில் கே.கே பிட்னெஸ் உடற்பயிற்சி கூடத்தை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கரோனா கடவுளின் செயல் எனக்கூறி மாநில அரசுகளை ரிசர்வ் வங்கியில் கடன் வாங்க நிதியமைச்சர் கூறுவது சட்டத்திற்குப் புறம்பானது.

உடற்பயிற்சி கூடத்தை தொடங்கிவைத்த அமைச்சர் பாண்டியராஜன்

ஜிஎஸ்டி நிலுவைத் தொகை என்பது சட்டப்படி நமக்கு கிடைக்கவேண்டிய தொகை. ஜிஎஸ்டி நிலுவைத் தொகை 12ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாடு அரசுக்கு சலுகையல்ல. அது சட்டப்படி தமிழ்நாட்டிற்கு கிடைக்கவேண்டிய தொகை. மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் மூலம் கிடைக்கப்பெறும் ஜிஎஸ்டி வருவாயில் மாநில அரசுகளுக்கு வழங்கவேண்டிய தொகையை விரைவாக அளிக்கவேண்டும் என சட்டம் உள்ளது.

'ஜிஎஸ்டி நிலுவைத் தொகை சலுகையல்ல தமிழ்நாட்டின் உரிமை'- அமைச்சர் பாண்டியராஜன்

தமிழ்நாடு அரசின் வருமானம் 25 விழுக்காடு குறைந்துள்ளது. எனவே, தமிழ்நாட்டுக்கு கிடைக்கவேண்டிய நிலுவைத் தொகையை மத்திய அரசு விரைவில் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காமல் இருப்பது அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசின் மீது வெறுப்பை உண்டாக்கும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:'மாநிலங்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைக்கிறது' - ப.சிதம்பரம் தாக்கு!

ABOUT THE AUTHOR

...view details