தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டின் 2ஆம் தலைநகரம் எது? - அமைச்சர் பாண்டியராஜன் பதில்! - second capital of Tamil Nadu

சென்னை: தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகரம் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்து முடிவு அறிவிப்பார் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Minister
Minister

By

Published : Aug 19, 2020, 2:18 PM IST

சென்னை காசிமேடு துறைமுகம் பகுதி மக்களுக்கு அமைச்சர் பாண்டியராஜன் நிவாரண பொருள்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தண்டையார்பேட்டையில் ஐந்து விழுக்காட்டிற்கு கீழ் பாதிப்பு உள்ளது. தண்டையார்பேட்டை மண்டலத்தில் கரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். விரைவில் பூஜ்ஜியம் என்ற நிலை வர பணி செய்து வருகிறோம். காசிமேட்டில் சில்லறை மீன் விற்பனையை மீண்டும் அனுமதிப்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்படும்” என்றார்.

2ஆம் தலைநகரம் எது?

தொடர்ந்து பேசிய அமைச்சர், “தமிழ்நாட்டில் தென் மாவட்டங்கள் பெரிய அளவில் வளர்ச்சி பெறவில்லை என்ற கோரிக்கையை முன்வைத்து தென் மாவட்ட அமைச்சர்கள் மதுரையை 2ஆம் தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து முதலமைச்சர் ஆய்வு செய்து எந்த மாவட்டத்தை அறிவிக்க வேண்டும், எப்போது அறிவிக்க வேண்டும் என முடிவு செய்வார்.

அமைச்சர் பாண்டியராஜன்

தடையை மீறி விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். ஏற்கனவே விநாயகர் சதுர்த்தி பண்டிகை குறித்து தலைமைச் செயலர் மதத் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டிருக்கிறார். இந்த விவகாரம் குறித்து சரியான நேரத்தில் சரியான முடிவை முதலமைச்சர் அறிவிப்பார்” என்று கூறினார்.

இதையும் படிங்க:திருச்சியை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும்

ABOUT THE AUTHOR

...view details