தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சார்பதிவாளர்கள் இனி சமதளத்தில் அமர்ந்தே பணி செய்யணும்' - பி. மூர்த்தி

பொதுமக்கள் மரியாதைக் குறைவை சந்திப்பதன் காரணமாக, இனி வரும் காலங்களில் சார்பதிவு அலுவலர்கள் உயர்ந்த மேடையில் அமைக்கப்பட்ட இருக்கைகளில் அமராமல், சமதளமான இருக்கைகளிலேயே அமர்ந்து பணிபுரிய வேண்டும் என அமைச்சர் பி. மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

பி. மூர்த்தி
பி. மூர்த்தி

By

Published : Jul 22, 2021, 10:20 PM IST

சென்னை: தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, சமீப காலமாக சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு, பல சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் சென்றவாரம் பதிவுத்துறைச் செயலர், பதிவுத்துறைத் தலைவர் ஆகியோருடன் கோயம்புத்தூர், சேலம் மண்டலங்களில், அமைச்சர் பி. மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.

சமதளத்தில் அமர்ந்து பணி செய்ய உத்தரவு

அப்போது பதிவு அலுவலர்கள் அலுவலகத்தில் உயர்ந்த மேடையில் அமர்ந்து பதிவுப் பணி செய்வதால், பொதுமக்களுக்கு மரியாதைக்குறைவு ஏற்படுவது கண்டறியப்பட்டது. மேலும் சார்பதிவாளர் அலுவலகங்களில் செயல்படுத்தப்படும் அனைத்து சேவைகளும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன.

அரசுக்குச் செலுத்தப்படும் கட்டணங்களும் இணைய வழியிலேயே செலுத்தப்படுவதால், சார் பதிவாளர்கள் பணத்தைக் கையாள வேண்டிய அவசியமில்லாத நிலையே உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, உயர் மேடைகளை அகற்றி, பதிவு அலுவலர்களின் இருக்கையினைச் சமதளத்தில் அமைத்து, சுற்றியுள்ள தடுப்புகளை உடனடியாக நீக்க அமைச்சர் பி.மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

தற்போது இதுகுறித்து பதிவுத்துறைத் தலைவரால் சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கட்சி பின்னே நிற்கும் - விஜயபாஸ்கர் விவகாரத்தில் அதிமுக அறிக்கை

ABOUT THE AUTHOR

...view details