சென்னை:இன்றும், நாளையும் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு சிறந்த முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு சான்றிதழ்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி வழங்கினார்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறும்போது, பள்ளிகளில் மாணவர்கள் முகக்கவசம் அணிவதை உறுதிசெய்யவேண்டும். எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் குழந்தைகளை சேர்ப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
மாணவர்கள் மாஸ்க் அணிவதை கண்காணிக்க உத்தரவு பெற்றோர்கள் அரசை நம்பி தங்களின் குழந்தைகளை சேர்க்கின்றனர். சமூக நலத்துறையால் நடத்தப்பட்டு வந்த எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் நடத்தப்பட வேண்டும். அதற்கான செலவினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொள்வதாக கூறியுள்ளார். எனவே மாணவர்கள் சேர்வதை கண்காணிக்க வேண்டும்.
9ஆம் முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்படும். இந்தத் திட்டத்தை முதலமைச்சர் குணம் அடைந்த பின் தொடங்கி வைக்கப்படும். மாணவர்களின் கல்வி திறனை அதிகரிக்க மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பாடுபட வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:முதலமைச்சர் ஸ்டாலின் நலமாக உள்ளார்- காவேரி மருத்துவமனை அறிக்கை