முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் கலை, பொறியியல் கல்லூரியில் அரியர் வைத்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவித்தார்.
அரியர் வழக்கு தொடர்பாக முதலமைச்சருடன் சட்டத்துறை அமைச்சர் ஆலோசனை! - அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி
சென்னை: அரியர் வழக்கு தொடர்பாக முதலமைச்சருடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இந்த அறிவிப்பு, பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு புறம்பானது என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சட்டத்துறை அமைச்சர் சி்.வி.சண்முகத்தை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார்.
மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் எவ்விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம் என்று ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டத்துறை அமைச்சர் சண்முகம், எடப்பாடி பழனிசாமியை இன்று (அக்டோபர் 2) சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையில் அரியர் அறிவிப்பு குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்தும், தற்போது அதிமுகவில் நடந்து வரும் கட்சி பிரச்னை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அக்டோபர் 7ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் தொடர்ச்சியாக அமைச்சர்கள் சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.