தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒன்றிய அரசு என்றுதான் புத்தகங்களில் இருக்கும் - அமைச்சர் பொன்முடி - பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பு

கல்லூரி பாட புத்தகங்களில் மத்திய அரசு என்பதற்கு பதிலாக ஒன்றிய அரசு என்றே இருக்கும் என தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

Minister of Higher Education ponmudi press meet  ponmudi press meet  press meet  Minister of Higher Education ponmudi  chennai ponmudi press meet  chennai news  chennai latest news  உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  தலைமை செயலகம்  சென்னை செய்திகள்  உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பு  பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பு  பொன்முடி
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

By

Published : Jul 26, 2021, 3:05 PM IST

சென்னை: தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை 26) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பி.எட் ஆசிரியர் படிப்புக்கான கட்டணத்தை, ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தனியார் கல்லூரிகள் வசூலிக்க கூடாது. மீறி வசூலித்தால் தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

முதலமைச்சரின் உத்தரவின்படி, பொறியியல் மாணவர்கள் சேர்க்கையில் இந்தாண்டு கல்வி கட்டணம் 75 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும்.

பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் விழுப்புரத்தில் கொண்டுவரப்பட்ட பல்கலைக்கழகம், மாணவர் நலன் கருதி தொடங்கப்பட்டது அல்ல. இதுவரை அந்தப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் உள்பட 4 பேர் மட்டுமே நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆட்சி காலத்தில் உயர் கல்வித்துறையில் பல்வேறு பணி நியமன முறைகேடுகள் நடைபெற்றன. அதில் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவின் தங்கை திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.

பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பங்களை அந்தந்த கல்லூரி உதவி மையங்கள் மூலம் மாணவர்கள் நேரடியாக கொடுக்கலாம். பள்ளிக் கல்வித் துறைபோல் உயர் கல்வி பாடப் புத்தகத்திலும் மத்திய அரசு ஒன்றிய அரசு என்றே இருக்கும்.

திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் உள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இருந்த பாடப்புத்தகங்களில் பல்வேறு தவறுகள் நடைபெற்றன. அதனை சரிசெய்து புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.

இதையும் படிங்க: அடுத்த மூவ் என்ன? ஆளுநரை சந்திக்கிறார் எடியூரப்பா!

ABOUT THE AUTHOR

...view details