சென்னை:சைதாப்பேட்டையிலுள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் வணிகவரி மற்றும் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கரோனா காலத்திலும் பத்திரப்பதிவு எப்போதும்போல நடைபெறுகிறது. ஒருதலைபட்சமாக பத்திரப்பதிவு செய்யும் அலுவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பத்திரப்பதிவுக்கு அரசு நிர்ணயித்த தொகையை தவிர கூடுதல் கட்டணத்தை வாங்கக்கூடாது என்று ஏற்கனவே கூறியுள்ளோம். அதனை மீறும் அலுவலர்கள மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.