தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுமார் 40 இடங்களில் மட்டுமே மழை நீர் தேங்கி உள்ளது - அமைச்சர் நேரு - மாநகராட்சியின் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை

சென்னையில் சென்ற வருடம் சுமார் 700 இடங்களில் மழை நீர் தேங்கிய நிலையில், இந்த ஆண்டு சுமார் 40 இடங்களில் மட்டுமே நீர் தேங்கி உள்ளதாக அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார். சுமார் 1,305 கி.மீ. தூரத்திற்கு கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 2, 2022, 8:07 AM IST

சென்னை: ரிப்பன் மாளிகையில் அமைந்துள்ள மாநகராட்சியின் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன் நேரு மற்றும் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேரு, "சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில் நிரந்தர தீர்வினை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் திருப்புகழ் தலைமையில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவானது சென்னையில் கள ஆய்வு மேற்கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய வெள்ளத்தடுப்பு பணிகளுக்கான அறிக்கையை சமர்ப்பித்தது.

அதனடிப்படையில் பல்வேறு திட்டங்களின் மூலம் சென்னையின் பிரதான பகுதிகளில் சுமார் 220 கி.மீ. நீளத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் சுமார் ரூ.710 கோடி மதிப்பீட்டில் மே மாதம் துவங்கப்பட்டு 157 கி.மீ. நீளத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

சுமார் 40 இடங்களில் மட்டுமே மழை நீர் தேங்கி உள்ளது - அமைச்சர் நேரு

இதன் பயனாக சென்ற ஆண்டில் ஐந்து முதல் பத்து நாட்கள் வரை மழைநீர் தேங்கியிருந்த பகுதிகளான சீத்தம்மாள் காலணி. ஜி.என்.செட்டி ரோடு, பசுல்லா ரோடு, கே.கே. நகர். பராங்குசபுரம், கொளத்தூர் ஆகிய பகுதிகளில் பணிகள் முன்னுரிமையுடன் மேற்கொள்ளப்பட்டன. தற்போதைய பெரும் மழையின் (10 முதல் 15 செ.மீ. வரை) தாக்கத்தில் மேற்கூறிய இடங்களில் நீர் எங்கும் தேங்கவில்லை.

இதுதவிர கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதியில் ரூ.3220 கோடி மதிப்பீட்டில் 700 கி.மீ. நீளத்திற்கும். கோவளம் வடிநிலப்பகுதியில் ரூ.167 கோடி மதிப்பீட்டில் 39 கிமீ நீளத்திற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணியின் காலம் மூன்று வருடம். அனால் இதுவரை 40% பணிகள் முடிவுற்றுள்ளன. இதனால் திருவொற்றியூர்,மணலி மாதாவரம், தண்டையார்பேட்டை அம்பத்தூர், கொளத்தூர் ஆகிய பகுதிகளில் மழைநீர் தேங்குவது பெருமளவு தவிர்க்கப்பட்டுள்ளது.

சுமார் 1,305 கி.மீ. தூரத்திற்கு கால்வாய்கள் தூர்வாரப்பட்டன. சென்ற வருடம் சுமார் 700 இடங்களில் நீர் தேங்கிய நிலையில் இவ்வாண்டு சுமார் 40 இடங்களில் மட்டுமே நீர் தேங்கியது. இதில், 9 இடங்களில் மட்டுமே தற்போது தேங்கிய தண்ணீர் தொடர்ந்து இரைக்கப்பட்டு வருகிறது.

சென்ற ஆண்டு 1200 மேட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்ட நிலையில் தற்போது 400 இடங்களில் மட்டுமே மோட்டார் பம்புகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளில் பயனாக சுமார் 40 இடங்களில் மட்டுமே மோட்டார் பம்புகள் இயக்கப்பட்டன.

வெள்ளதடுப்பு பணிகளில் பொறியியல் துறையின் 2,000 அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர் மேலும், சுமார் 19,500 நபர்கள் தூய்மை பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 19 மரங்கள் விழுந்துள்ளன. 17 அகற்றப்பட்டன 2 மரங்கள் அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சி 16 சுரங்கபாதைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றது. இதில் எந்த சுரங்கப்பைதையிலும் மழைநீர் தேங்கவில்லை. போக்குவரத்து சீராக உள்ளது.

பருவ மழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கவும் அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் ரிப்பன் கட்டட வளாகத்தில் அனைத்து சேவைத்துறை அலுவலர்களுடன் கூடிய 24 மணி நேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. சென்னையில் புதிதாக தண்ணீர் தேங்கிய இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இருப்பை நிரூபிக்க ஓபிஎஸ் பணிகளை விரைந்து முடியுங்கள் என பணிகள் நிறைவடையும் வேளையில் அறிக்கை விட்டு வருகிறார்" என தெரிவித்தார்.

ஆய்வின்போது மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையர் செகண்ட்ஸின் பேடி துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க : செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு

ABOUT THE AUTHOR

...view details