சென்னைநந்தனத்தில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அலுவலக வளாகத்தில் ஆவின் பாலகத்தை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் சா.மு நாசர் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர், "ஏறக்குறைய ஆவின் பாலகங்கள் வியாபார நோக்கோடு இல்லாமல், மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் செயல்பட்டு வருகிறது. 10,000 ஆவின் பாலகங்கள் தமிழ்நாடு முழுவதும் திறக்கப்பட்டுள்ளன. 50 ஹைடெக் ஆவின் பாலகங்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ளன.
நெய், வெண்ணெய், சாக்லேட் பால்பவுடர், பாயசம், நூடுல்ஸ் உள்ளிட்டப்பொருட்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்யத்திட்டமிட்டுள்ளோம். விரைவில் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும். கோடைகாலம் என்பதால் ஆவின் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது' எனத்தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 'ஆவினில் பணிநியமன முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும். கடந்த மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட 16 அறிவிப்புகளில் 14 அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 அறிவிப்புகள் நீண்டகால இலக்கு என்கிற அடிப்படையில் செயல்வடிவம் பெற உள்ளது'' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அறப்போர் இயக்கம் பரபரப்பு புகார்