சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான அரசானது மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்தவகையில் பொது மக்களின் நலன் கருதி தமிழ்நாடு அரசு அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைத்ததினால் ஆவின் பால் விற்பனை வெகு வேகமாக அதிகரித்துள்ளது.
இதனால் 1 கோடி நுகர்வோர்கள் மற்றும் 450 நிறுவனங்கள் பயனடைந்துள்ளனர். புதிதாக ஏறக்குறைய 6 லட்சம் நுகர்வோர்கள் ஆவினில் இணைந்தமையால் ஆவினின் சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டு முதலமைச்சர் ஆவின் பால், பால் பொருள்கள் விற்பனையை அதிகரிக்கவும், செயலிழந்த பால் உற்பத்தி சங்கங்களைப் புதுப்பிக்கவும் விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.