சென்னை: ஆவடியில் நடைபாதை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை, நிதி உதவியை தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர் வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளரைச் சந்தித்துப் பேசிய அவர், “தேர்தல் பரப்புரையின்போது நடைப்பாதை வியாபாரிகளின் கோரிக்கையை நிறைவேற்றும்விதமாக ஆவடி தொகுதிக்குள்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு 10,000 ரூபாய் நிதி உதவி, அடையாள அட்டை வழங்கப்பட்டது. மேலும் அவர்களின் கோரிக்கைகள் தொடர்ந்து நிறைவேற்றப்படும்.
நடைபாதை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வமில்லை. தற்போது அனைவர் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ள ஜெய் பீம் திரைப்படத்தைப் பார்க்க ஆர்வமுடன் இருக்கிறேன்.
கடந்த ஆட்சியைவிட தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தை வடிய செய்தது திமுக ஆட்சிதான். ஆனால் நானும் ரவுடிதான் என்ற வடிவேலு நகைச்சுவையைப் போல் தானும் தமிழ்நாட்டில் இருப்பதைக் காட்டிக்கொள்வதற்காகவே அதிமுக ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருக்கிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Atrocities of alcoholics: வெள்ளத்தில் சிக்கி அசம்பாவிதம் நடந்தால் யார் பதில் சொல்வது? - மதுப்பிரியரின் 'நச்' கேள்வி