சென்னை:சட்டப்பேரவையில் வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்த கொள்கை விளக்க குறிப்பில், "சென்னை பாடி குப்பம் பகுதியில் ரூ.62.77 கோடி மதிப்பீட்டில் 155 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். சென்னை அயனாவரத்தில் ரூ.86.31 கோடி செலவில் 216 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.
ஈரோடு மாவட்டம் சம்பத் நகர் மற்றும் பெரியார் நகர் ஆகிய பகுதிகளில் ரூ.40.60 கோடி மதிப்பீட்டில் 108 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மனைகள் மேம்படுத்தப்படும்.
சென்னை அம்பத்தூரில் ரூ.8.87 கோடி மதிப்பீட்டில் 151 மனைகள் மேம்படுத்தப்படும். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் ரூ.8.50 கோடி மதிப்பீட்டில் 306 மனைகள் மேம்படுத்தப்படும். சேலம் மாவட்டம் ஆத்தூரில் ரூ.4 கோடி மதிப்பில் 82 மனைகள் மேம்படுத்தப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் 54 மனைகள் மேம்படுத்தப்படும். மதுரை மாவட்டம் தத்தநேரியில் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் 119 மனைகள் மேம்படுத்தப்படும். பொதுமக்களின் தேவைக்கேற்ப பிரதான இடங்களில் வணிக வளாகங்கள் ஏற்படுத்தப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரூ.25 கோடி ரூபாய் மதிப்பில் வணிக வளாகம் கட்டப்படும். மதுரை மாவட்டம் தோப்பூர் கிராமத்தில் ரூ.23.20 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டப்படும். சென்னை மாவட்டம் லாயிட்ஸ் காலனியில் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் ரூ.451 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
குத்தகை ஒப்பந்தம் மற்றும் விற்பனை பத்திரம் ஆகியவை தமிழில் வழங்கப்படும். மூன்றாம் தரப்பு கண்காணிப்பு குழு மூலம் வீட்டு வசதி வாரிய கட்டடங்களில் உறுதித் தன்மையை தணிக்கை செய்து உறுதிப்படுத்தப்படும். வாரிய பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும். வீடு வாங்குபவர்களின் பொருளாதார அழுத்தத்தை குறைக்கும் வகையில் தவணை முறைத் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தப்படும்.
கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள்