தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹைட்ரோ கார்பன், 8 வழிச்சாலை திட்டத்திற்கு அனுமதி கிடையாது: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - ஹைட்ரோ கார்பன், 8 வழிச்சாலை திட்டத்திற்கு அனுமதி கிடையாது

சென்னை: ஹைட்ரோ கார்பன், 8 வழிச்சாலை திட்டத்திற்கு அனுமதி கிடையாது என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

By

Published : May 12, 2021, 9:56 PM IST

சென்னை செம்மொழிப் பூங்காவில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (மே.12) ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "தமிழ்நாட்டில் புதிதாக 120க்கும் மேற்பட்ட உழவர் சந்தைகள் திறக்கப்பட உள்ளன. புதிய வேளாண் சட்டம், 8 வழிச்சாலை, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி கிடையாது என்பதில் திமுக உறுதியாக இருக்கும்.

முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு மக்கள் எதிர்பாராத பல சலுகைகளை வழங்கி வருகிறார்.

தோட்டக்கலை மூலம் 24 பூங்காக்கள் தமிழ்நாடு முழுவதும் அமைந்துள்ளன. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 78 விதை நாற்றுப் பண்ணைகள் உருவாக்கப்பட்டு, விவசாயிகளுக்கு இலவசமாக விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏறக்குறைய 18 லட்சம் ஹெக்டேர் பகுதிகள் தோட்டக் கலைத்துறை மூலம் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகள் சரியாக பாராமரிக்கப்படாத நிலையில், அவற்றை சரியாக பராமரிப்பதுடன் தமிழ்நாட்டில் 120க்கும் மேற்பட்ட புதிய உழவர் சந்தைகளை திறக்க அரசு சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

வேளாண் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக துறை ரீதியாக ஆய்வு நடத்தி முதலமைச்சரிடம் தெரிவிக்கப்படும். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக முதலமைச்சர், சொன்னதை செய்வார். புதிய வேளாண் சட்டங்களை தடை செய்வது தொடர்பாக ஆராய்ந்து முடிவு செய்யப்படும்.

பலாப்பழங்களை சந்தைப்படுத்துவது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். பண்ருட்டி பலாப்பழங்களை விவசாயிகள் தடையின்றி சென்னை கொண்டு வருவதற்கு போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மும்முனை மின்சாரத்திற்கு விண்ணப்பித்து காத்துள்ள விவசாயிகளுக்கு விரைந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

இதையும் படிங்க: ’காத்திருந்தால் வாய்ப்பு கிடைக்கும் என்பதற்கு அப்பாவு உதாரணம்’ - குவியும் வாழ்த்துகள்

ABOUT THE AUTHOR

...view details