தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவிரி ஆறு மாசுபடுவதைத் தடுக்க நடவடிக்கை - அமைச்சர் மெய்யநாதன் - சென்னை மாவட்ட செய்திகள்

காவிரி ஆறு மாசுபடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

காவிரி ஆறு மாசுபடுவதைத் தடுக்க நடவடிக்கை
காவிரி ஆறு மாசுபடுவதைத் தடுக்க நடவடிக்கை

By

Published : Oct 9, 2021, 3:24 PM IST

சென்னை: காவிரி ஆறு மாசுபடுவதைத் தடுப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி காவிரி உள்ளிட்ட முக்கிய நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கும் நோக்கில், அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காவிரி ஆற்றில் கழிவுகள் கலந்து ஆற்று நீர் மாசடைவதாக சென்னை ஐ.ஐ.டி குழு நடத்திய ஆய்வில் தெரியவருகிறது.

இதற்கிடையில் ஈரோடு, கரூர், திருப்பூர் பகுதிகளில் இயங்கிவரும் சாய, சலவைத் தொழிற்சாலைகளிலிருந்து கழிவு நீர் ஏதும் காவிரி மற்றும் அதன் உபநதிகளில் வெளியேற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள் அடங்கிய 5 குழுக்கள் அக்டோபர் 6 ஆம் தேதி அமைக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆறு மாசுபடுவதைத் தடுக்க நடவடிக்கை

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய பொறியாளர்களால் காவிரி ஆற்றில் பல்வேறு இடங்களில் இன்று (அக்.9) தண்ணீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளன.

முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி காவிரி உள்ளிட்ட முக்கிய நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ஆப்கானிஸ்தானில் ஷியா மசூதிக்குள் குண்டுவெடிப்பு.. 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details