சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட விரிவாக்கப் பணி வண்ணாரப்பேட்டையில் இருந்து எங்கோ நகர் வரை நடைபெற்றுவருகிறது. தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி இதனைத் திறந்து வைக்கிறார் என்பதால் இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. இந்நிலையில், சுங்கச்சாவடி, விம்கோ நகர் ரயில் நிலையங்களில் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை மெட்ரோ ரயில் பணிகள்: அமைச்சர் ஆய்வு
சென்னை: மெட்ரோ ரயில் முதல்கட்ட விரிவாக்கப் பணிகளை அமைச்சர் எம்.சி.சம்பத் அலுவலர்களுடன் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் பிரதீப் யாதவ் உடனிருந்தார். இந்த வழித்தடத்தில் உள்ள மற்ற ஐந்து ரயில் நிலையங்களில் இதுவரை முடிக்கப்பட்டுள்ள பணிகள் குறித்தும், நிறைவடையாமல் உள்ள இறுதிக்கட்ட பணிகள் குறித்தும் அவர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார். சென்னை மெட்ரோ ரயில் திறப்புக்கு தயாராகி வரும் நிலையில், உரிய நேரத்தில் பணிகளை முடிக்குமாறு அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகள் குறித்து ஆய்வு!