சென்னை: பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நில சூழலியல் பூங்காவில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பாக உலக ஈர நில தின நிகழ்ச்சி வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தலைமையில் நடைபெற்றது. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறையின் செயலாளர் சுப்பையா சாவஹு, வேளச்சேரி எம்எல்ஏ அசன் மௌலானா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு "ராம்சார் தலம்" கல்வெட்டை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசியதாவது, "பிப்.02 உலக ஈர நில நாள் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் ஈர நிலத்தை பாதுகாக்க வேண்டும் என்ற முதலமைச்சர் கூற்றுப்படி இயக்கத்தை தொடங்கி ஈர நிலத்தை பாதுகாக்க கூடிய பணியை செய்து வருகிறோம். கூடுதலாக 13 ஈரநிலத்தை கண்டறியப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் 14 தலங்கள் உள்ளது. இந்த ராம்சார் தளங்கள் இந்தியாவில் மொத்தம் 75 உள்ளன. ராம்சார் ஈரநிலங்களை பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை தற்போது உள்ளது.