தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவி மரணத்தை அரசியல் ஆக்க வேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்றும்; மருத்துவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன்
அமைச்சர் மா. சுப்பிரமணியன்

By

Published : Nov 15, 2022, 3:07 PM IST

Updated : Nov 15, 2022, 4:19 PM IST

சென்னை: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கால் அகற்றப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த சம்பவத்தில், சிகிச்சையில் கவனக்குறைவாக இருந்த மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் நடைபெற்ற சுகாதார மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, 'மாணவி பிரியாவின் இறப்பு வருத்தமான விஷயம் தான். பிரியாவின் மரணத்தை யாரும் அரசியல் ஆக்கக் கூடாது. அரசியல் நோக்கோடு இந்த விவகாரத்தை அணுகுவது அரசியல் தலைவர்களுக்கு அழகல்ல. மாணவிக்கு சரியான சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு போடப்பட்ட பேண்டேஜ் கட்டில்தான் பிரச்னை எழுந்துள்ளது.

மாணவிக்கு அறுவை சிகிச்சையில் தவறு ஏற்பட்டது என்பதைத் தெரிந்த உடன் குழு அமைத்து ஆய்வு செய்தோம். அதில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. மாணவி பிரியாவுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். அவர் இறந்த நிலையில், இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மாணவி கடந்த வாரம் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க வந்த போது, அவரை இங்கேயே சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளனர். ஆனால், அவரின் சகோதரர் பெரியார் நகர் மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம் எனத் தெரிவித்துள்ளார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையிலும் தவறுகள் நடைபெறவில்லை. கட்டுப்போட்டதில் தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மருத்துவர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மருத்துவக் கவுன்சில் விதிகளின் படியும், சட்டப்படியும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவி பிரியா மரணத்தை வைத்து பதற்றமான சூழலை யாரும் ஏற்படுத்த வேண்டாம்.
மாணவியின் குடும்பத்தில் அண்ணன், தம்பி என 3 பேர் உள்ளனர். அவர்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். மாணவியின் பெற்றோர்கள் உடலைப் பெற்றுச்சென்றுள்ளனர். அவர்கள் யாரும் போராடவில்லை. அவருடன் படித்த மாணவர்கள் சிலர்தான் உடனே கைது செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தினர்.

மாணவி மரணத்தை அரசியல் ஆக்க வேண்டாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பணிச்சுமை என்பது கிடையாது. 4 ஆயிரத்து 308 பணியிடங்கள் காலியாக உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. காலிப் பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. செவிலியர் பணியிடங்களையும் அதிகரிக்கத்தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இதையும் படிங்க :கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு: ரூ.10 லட்சம் நிவாரணம்

Last Updated : Nov 15, 2022, 4:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details