சென்னை:திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் பேச்சு குறித்து சமூக வலைதளத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், ”சாதிய வன்முறைகளும், தீண்டாமை கொடுமைகளும் இன்றளவும் நாட்டில் பெருந்துயராக இருப்பதற்கு காரணம் மனு தர்மமே.
இந்தியத் திருநாட்டில் மக்களுக்குள் ஏற்றத்தாழ்வுகளை புகுத்தி, நாட்டை சீரழித்து வரும் சனாதானத்தை தூக்கிப் பிடித்து அரசியல் ஆதாயம் தேடுபவர்களுக்கு ராசா அவர்களின் பேச்சு புறணியில் அடித்தார் போல் இருந்திருக்கும்.
தாழ்த்தப்பட்ட வகுப்பினை சார்ந்த மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளும், கொடுமைகளும் இன்றளவும் மக்களை வருத்திக் கொண்டிருக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ராசா அவர்களின் கருத்திலுள்ள உண்மைகளை சாமானிய மக்கள் அறிந்திருப்பர்.
'ஆ.ராசாவின் கருத்தை சாமானிய மக்கள் அறிந்திருப்பர்...!' - அமைச்சர் மனோதங்கராஜ் சாதி பாகுபாட்டற்ற சமூகமே ஒன்றிணைந்த மனிதநேயமிக்க மக்கள் சமூகம் எனத் தெரிவித்த அவர் அதுவே அம்பேத்கராலும், பெரியாராலும், அண்ணாவாலும், மறைந்த முதலமைச்சர் கருணாநிதியாலும் வளர்த்து வரப்பட்டிருக்கின்றது. இனியும் திராவிட மாடல் ஆட்சியின் மூலம் அனைத்து மக்களும் ஒன்றிணைத்த சமூகமாக தமிழ்நாடு திகழும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவுத்திட்டம் - ருசியான ஃபுல் மெனு விவரம் உள்ளே..!