தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

$ 100 பில்லியன் பொருளாதார வளர்ச்சிக்கு 10% வளர்ச்சி தருவோம் - ஐடி அமைச்சர் - Mk Stalin

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ள 100 பில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியில் 10 சதவிகித பங்களிப்பை தகவல் தொழில்நுட்பத் துறை அளிக்கும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Dec 9, 2022, 12:38 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய தொழிற் கட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள 'Umagine Chennai' என்ற தலைப்பில் தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் திறன் வளர்ப்பு குறித்த 'ஆசியாவின் மிகப்பெரிய உச்சி மாநாடு' குறித்து கிண்டியில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று (டிச.8) செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், ''Umagine Chennai' என்ற தலைப்பில் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைவோர், திறன் வளர்ப்புகள், கண்டுபிடிப்புகள் குறித்த 'ஆசியாவின் மிகப்பெரிய உச்சி மாநாடு' அடுத்த ஆண்டு 2023 மார்ச் 23,24,25 ஆகிய மூன்று நாட்கள் சென்னை நந்தனம் வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் வருகிற 2030ஆம் ஆண்டிற்குள், 100 பில்லியன் டாலர் என இலக்கு நிர்ணயித்து உள்ளோம். அதில், 10 சதவீத பங்களிப்பை தகவல் தொழில்நுட்பத்துறை அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்படும் என ஒரு தகவல் பரவி இருந்தாலும், பிற மாநிலங்களைப் பொறுத்தவரை தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதன் துறை சார்ந்த நிறுவனங்களின் வளர்ச்சி முதல் கட்ட நகரங்கள், இரண்டாம் கட்ட நகரங்கள், மூன்றாம் கட்ட நகரங்கள் என அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியும் சிறப்பாக இருப்பதாக உள்ளது. இதனால், பொருளாதார மந்த நிலைப் பாதிப்பு தமிழ்நாட்டிற்கு இருக்காது என நம்பிக்கை தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்பத் துறையைப் பொறுத்தவரை, தனியார் நிறுவனங்கள் அதிக முதலீடு செய்ய வருவதாகவும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஆசிய அளவில் நடைபெறக்கூடிய இந்த மாநாடு புதிய முயற்சிகளுக்கும், தொடக்க நிறுவனங்களுக்கும் ஒரு பாலமாக அமையும். மேலும், எல்காட் நிறுவனம் (Elcot Company) மூலம் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி என தமிழகத்தின் பிற பகுதிகளிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை அமைக்கக்கூடிய பணிகள் நடைபெற்று வருவதாகவும்; விரைவில் அவைகள் செயல்பாட்டுக்கு வருகிற பட்சத்தில் எல்காட் நிறுவனத்தின் வருவாய் மேலும் அதிகரிக்கும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசு பள்ளி கட்டட பணிகளை முடிக்க நடப்பாண்டில் ரூ.240 கோடி ஒதுக்கீடு

ABOUT THE AUTHOR

...view details