தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 117ஆவது பிறந்தநாளை முன்னிட்டு குன்றத்தூரில் நாடார் சங்கத்தின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் பழனி ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர்.
தமிழுக்கு துரோகம் செய்ய மாட்டோம் - மாஃபா பாண்டியராஜன் - செய்தியாளர் சந்திப்பு
சென்னை: பழையக் கல்வி முறையை நீக்கி புதியக் கல்விக்கொள்கையில் அனைவருக்கும் நன்மைதரும் அம்சங்களைக் கொண்டுவர முயற்சிப்போம் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், அஞ்சல் துறை தேர்வுகளில் தமிழ், மற்ற மாநில மொழிகளில் எழுதக் கூடாது என அறிவிப்பு வந்துள்ளது தவறு என சுட்டிக்காட்டினார். தமிழுக்கு அதிமுக அரசு துரோகம் இழைக்காது; தமிழை இழிவுபடுத்தும் செயலை யார் செய்தாலும் அதிமுக அரசு எதிர்த்துக் குரல் கொடுக்கும் என கூறிய அவர், புதிய கல்விக்கொள்கை என்பது வெறும் வரைவுதான் என்றார். ஜுலை 31ஆம் தேதி வரை கருத்து கூற நேரம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், மும்மொழிக் கொள்கை என்ற ஒன்றை வைத்துகொண்டு இது அனைத்தும் தவறு எனக் கூற முடியாது எனக் குறிப்பிட்ட பாண்டியராஜன், புதிய கல்விக் கொள்கையில் அனைவருக்கும் நன்மைதரும் அம்சங்களைக் கொண்டுவர முயற்சிப்போம் என்றார். தமிழ்நாடு அரசு எதை ஏற்றுக்கொள்கிறது, எதை எதிர்க்கிறது என முடிவு செய்து தமிழ்நாடு இளைஞர்கள் நலன் பாதிக்காத வகையில் செயல்படுவோம் எனவும் அவர் கூறினார்.