தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மக்கள் மனதில் பீதியை கிளப்பவே ஸ்டாலின் அறிக்கை வெளியிடுகிறார்' - Minister mafa pandiarajan condemned DMK Leader Stalin

சென்னை: கரோனா தொற்று குறித்து மக்கள் மனதில் பீதியை கிளப்பவே ஸ்டாலின் அறிக்கை வெளியிடுகிறார் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விமர்சித்தார்.

மக்கள் மனதில் பீதியை கிளப்பவே ஸ்டாலின் அறிக்கை வெளியீடுகிறார் -அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்!
மக்கள் மனதில் பீதியை கிளப்பவே ஸ்டாலின் அறிக்கை வெளியீடுகிறார் -அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்!

By

Published : Jun 23, 2020, 4:38 PM IST

சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளான புது வண்ணாரப்பேட்டையில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று (ஜூன் 23) ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில், “கரோனா தொற்று பாதிப்பு ஜூன் 30ஆம் தேதிக்குள் குறையும். காவல்துறை உதவியுடன் பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. களப் பணியாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கவில்லை என்ற புகார் முற்றிலும் தவறானது.

மக்கள் மனதில் பீதியை கிளப்ப வேண்டும் என்பதற்காகவே அரசை விமர்சித்து ஸ்டாலின் அறிக்கை வெளியிடுகிறார். கரோனா போரில் வெற்றி அடைந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் அரசு மீது குறை கூறி வருகிறார். அவருக்கு பதில் சொல்லி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை” என்றார்.

இதையும் படிங்க...'உச்ச நீதிமன்ற கட்டளைகளை அரசு பின்பற்ற வேண்டும்'- மு.க. ஸ்டாலின் அறிக்கை!

ABOUT THE AUTHOR

...view details