தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக ஆட்சியில் போதைப்பொருள்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்? - மா.சுப்பிரமணியன்

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் போதைப்பொருள்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காததே போதைப்பொருள் பழக்கம் அதிகரிக்கக் காரணம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் போதைப் பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்?- மா.சுப்பிரமணியன்
அதிமுக ஆட்சியில் போதைப் பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்?- மா.சுப்பிரமணியன்

By

Published : Aug 10, 2022, 5:31 PM IST

Updated : Aug 10, 2022, 8:11 PM IST

சென்னைகலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (10.8.2022) மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடனான ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். இதில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

அதிமுக ஆட்சியில் போதைப்பொருள்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்? - மா.சுப்பிரமணியன்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'முதலமைச்சர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் பங்கேற்ற போதைப்பொருள் தடுப்பு மாநாடு நடைபெற்றது. போதைப்பொருள் தடுப்பு, போதைப் பொருள் பயன்படுத்துவோரை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டன.

கடந்த அதிமுக ஆட்சியில் போதைப்பொருள் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் போதைப்பொருட்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மலைப்பகுதிகளில் கஞ்சா பயிரிடுதல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் கஞ்சா பொருட்கள் ஊடுருவியுள்ளது. இதனைத்தடுப்பதற்கான ஆலோசனையினை முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார்.

இளைய சமுதாயத்தினர் பல வகைகளில் போதைப்பொருள்களை பயன்படுத்துகின்றனர். நுண்ணறிவுப்பிரிவை ஏற்படுத்தி போதைப்பொருள்கள் ஊடுருவும் முயற்சிகளை கண்டுபிடிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றும் வாட்ஸ்அப் குழுக்களில் புனைப்பெயர் வைத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதை நுண்ணறிவு மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பயன்படுத்துவோர், விற்பனை செய்பவர் குறித்து தகவல் தெரிவிக்க விரைவில் இலவச தொடர்பு எண்கள் அறிவிக்கப்படும். போதைப்பொருள் விற்பனை செய்த 102 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. குற்றஞ்சாட்டப்பட்ட 65 பேரின் அசையும் மற்றும் அசையா சொத்துகள் 15 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

கடந்த அதிமுக ஆட்சியைக் காட்டிலும் திமுக ஆட்சியில் போதைப்பொருள் விற்பனை செய்பவர் மீது 7 மடங்கு அதிகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' எனத்தெரிவித்தார்.

'மதுக்கடைகள் இல்லாத மாநிலங்களில் கள்ளச்சாராய இறப்பு அதிகரித்துள்ளது. தற்போது போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறோம். இந்தியா முழுவதும் போதைப்பொருள் பயன்படுத்துவோர் எண்ணிக்கையை ஒப்பிடும்போது தமிழ்நாடு கடைசி இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் போதைப்பொருட்கள் பரவலைக்கட்டுப்படுத்த தவறியதே போதைப்பொருள் அதிகரிக்கக்காரணம்'' என அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் போதைப் பொருளைத்தடுப்பது சவாலான காரியமாக உள்ளது. மாவட்ட மருத்துவமனைகளில், போதைப்பொருள் மறுவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன எனத்தெரிவித்தார்.

இதையும் படிங்க:போதை பொருள் பல்வேறு குற்றங்களுக்கு தூண்டுதலாக அமைகிறது - முதல்வர் ஸ்டாலின்

Last Updated : Aug 10, 2022, 8:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details