சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில், பூஸ்டர் டோஸ் செலுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர்.
தீர்மானத்தின் மீது பேசிய விஜயபாஸ்கர், கரோனாவுக்கான இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மூன்றாவது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு பூர்வாங்க பணியை அமெரிக்கா தொடங்கியிருப்பதாக பேசினார்.
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தாலும், அதன் நோய் எதிர்ப்புத் திறன் ஒரு வருடம் மட்டுமே இருக்கும் என்பதால், தமிழ்நாட்டில் பூஸ்டர் டோஸ் செலுத்துவதில் அரசின் நிலைப்பாடு என்ன எனவும் கேள்வி எழுப்பினார்.