தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'56.18 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து' - அமைச்சர் மா.சுப்பிரமணியன் - 56.18 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

தமிழ்நாடு முழுவதும் இன்று (பிப்ரவரி 27) நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 56.18 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

56.18 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
56.18 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து

By

Published : Feb 27, 2022, 10:11 PM IST

சென்னை: சென்னையிலுள்ள தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலை குடியிருப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்ரவரி 27) தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாமினை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவ நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் போலியோ சொட்டு மருந்து குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழ்நாட்டில் மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்களின் மூலம் 57.61 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று 56.18 லட்சம் குழந்தைகளுக்கு (97.53%) போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

இப்பணியில் அனைத்து துறைகளைச் சார்ந்த சுமார் 2 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் விடுபட்ட அனைத்துக் குழந்தைகளையும் கண்டறிந்து இன்று முதல் மூன்று (பிப்.27 - பிப்.29) நாட்களுக்கு வீடு, வீடாக சென்று போலியோ சொட்டு மருந்து வழங்குவர். பயணவழி மையங்கள் (Transit Booths) 3 நாள்கள் செயல்படும்.

எளிதில் சென்றடைய முடியாத பகுதிகளுக்கு சிறப்புக்கவனம் செலுத்தி போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி நடைபெற்றது. தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் போலியோ சொட்டு மருந்து குறித்த விழிப்புணர்வு பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:லுக்கால் கிக் ஏத்தும் வேதிகா புகைப்படத் தொகுப்பு!

ABOUT THE AUTHOR

...view details