தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எந்தெந்த மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு அதிகம்? - அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல் - Minister Ma Subramanian says In which district is incidence of dengue high

கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, தருமபுரி மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது என மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

minister-ma-subramanian-says-in-which-district-is-incidence-of-dengue-high எந்தெந்த மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு அதிகம் ? - அமைச்சர்  மா.சுப்பிரமணியன் தகவல்
minister-ma-subramanian-says-in-which-district-is-incidence-of-dengue-high எந்தெந்த மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு அதிகம் ? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

By

Published : May 16, 2022, 2:03 PM IST

சென்னைஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தேசிய டெங்கு தடுப்பு தினம் நிகழ்ச்சி இன்று (மே16) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேசிய டெங்கு தடுப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டதுடன் கொசு தடுப்பு புகைப்பரப்பும் வாகனத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு கொடியசைத்துத் தொடக்கி வைக்கின்றனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாடு முழுவதும் தேசிய டெங்கு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

மக்களிடம் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஏற்பட்ட டெங்கு பாதிப்பை மனதில் கொண்டு இன்று விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. கடந்த 2012, 2015, 2017 கால கட்டத்தில் டெங்கு வைரஸ் அதிக உயிரிழப்புகள் ஏற்படுத்தின.

அதிகபட்சமாக டெங்குவிற்கு 65 பேர் 2017ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்கள். இதனால் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வீடு தோறும் சென்று டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெங்கு காய்ச்சலை கண்டறிய 125 இருந்த மையங்கள் இருந்தன. ஆனால் இன்று 300 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

21,000 பணியாளர்கள் டெங்கு தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கொசுக்களை ஒழிக்கத் தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. 2017 ஆம் ஆண்டு இந்தியாவில் அதிக இழப்பு ஏற்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 8 பேர் உயிரிழந்த நிலையில், இந்த 2022 ஆண்டு தொடங்கி 5 மாதங்கள் ஆகியும் இன்னும் உயிரிழப்பு இல்லை.

கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, தருமபுரி மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக உள்ளது. டெங்கு தடுப்பு நடவடிக்கை தொடர்பாகச் சென்னையில் கடந்த 5 மாதங்களில் 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் சுய டையாலைசிஸ் பைகள் தேவைப்படுவோரைக் கண்டறிந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்து சமய அறநிலையத்துறை நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் பாடாதது மிகவும் வேதனைக்குரியது - அமைச்சர் துரைமுருகன்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details