சென்னை :தமிழ்நாட்டில் நேற்று 30 ஆயிரத்து 744 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா தொற்றுப் பரவலின் எண்ணிக்கை குறைவதைப் பொறுத்து, வரும் வாரங்களில் உள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இருக்காது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மெரினாவில் உள்ள நேதாஜி சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
பெருநகரங்களில் குறையும் கரோனா
அப்போது பேசிய அவர், 'தமிழ்நாட்டில் கரோனா தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வந்த நிலையில், நேற்றைக்கும் இன்றைக்குமான மாதிரிகளை ஒப்பிட்டுப்பார்க்கும்போது தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருகிறது.
சென்னையைப் பொறுத்தவரை 9 ஆயிரம் வரை சென்ற தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை நேற்று 6 ஆயிரம் அளவுக்கு குறைந்துள்ளது. மேலும், இந்தியாவின் பெருநகரங்களில் கரோனா தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது.
எனவே, தொற்று விரைவில் குறையும் பட்சத்தில் முழு ஊரடங்கு தேவையில்லாத ஒன்றாக இருக்கும். எனவே, கரோனா தொற்று குறைந்தால் வரும் வாரங்களில் ஞாயிறு முழு ஊரடங்கு இருக்காது' எனக் கூறினார்.
இதையும் படிங்க : Sunday Lockdown - அரசு அறிவுறுத்தலின்படி ஆட்டோ, டாக்ஸிக்கள் இயக்கம்