சென்னை:சென்னை மருத்துவக் கல்லூரியின் 187வது நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (ஜூன் 12) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி நிறைவு சான்றிதழ்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் வழங்கினர்.
பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'பொது கலந்தாய்வை மத்திய அரசே நடத்தும் என்ற அறிவிப்பு கண்டனத்திற்குறியது என்றார். அகில இந்திய அளவில் பொது கலந்தாய்வு நடத்தப்பட்டால் தமிழக மாணவர்களுக்கான முன்னுரிமை பறிபோகும் எனத் தெரிவித்தார். அதிகளவு மருத்துவக் கல்வி இடங்களை வைத்துள்ள தமிழகத்தில், தமிழர்கள் அல்லாத மாநிலங்களை சேர்ந்தவர்களும் பயன்பெறுவர் என்றார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பொது கலந்தாய்வு என்ற அறிவிப்பு மத்திய அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பொது கலந்தாய்வு முடிவை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும் என்று கூறியுள்ளார்.
பட்டமளிப்பு விழாவில் அதிக பதக்கம் பெற்றவர்:இந்த பொது மருத்துவக் கலந்தாய்வுக்கு, எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதலமைச்சர் ஏற்கனவே, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தாக கூறிய அவர், அக்கடிதத்தையும் பொருட்படுத்தாமல் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பொது கலந்தாய்வு நடத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது' எனப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மருத்துவ கல்லூரியின் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றதாகவும், இதில் 248 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். இதில், மாணவர்களுடன் பெற்றோர்களும் பங்கேற்றனர். இதில் வீர சிவபாலன் என்ற மாணவன் அனைத்து பாடங்களிலும் அதிக மதிப்பெண் பெற்று பல்வேறு வகைகளில் தன்னார்வலர்கள் தந்த மருத்துவப் பதக்கங்களை பெற்று இருப்பதாக தெரிவித்தார்.
'பொது மருத்துவக் கலந்தாய்வு' வேண்டாம் என கடிதம்:கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தரவரிசைப் பட்டியலில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையை பொறுத்தவரையிலும் தொடர்ந்து முன்னேறி இந்த ஆண்டு 11ஆம் இடத்தை பெற்றுள்ளது. இந்திய அளவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசு நடத்தும் கல்லூரிகளில் சென்னை மருத்துவக் கல்லூரி முதலிடம் பெற்றுள்ளதாக பெருமிதம் கூறினார். மேலும், பொது கலந்தாய்வு குறித்து அறிவிப்பு வெளியானதும், மத்தியஅரசுக்கு தமிழக அரசின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. மாநிலங்களின் பங்பளிப்பை குறைக்கும், விதிமுறைகளுக்கு எதிரானது என பல்வேறு விஷயங்கள் குறிப்பிட்டு, பொது கலந்தாய்வு ஏற்புடையதல்ல என கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.