சென்னை:சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், ஒப்பந்ததாரர் செவிலியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்குப் பதிலளித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துரை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாடு முழுவதும் 47 ஆயிரத்து 938 செவிலியர் பணியாற்றி வருகின்றனர்.
அதில் 12ஆயிரத்து 787 பேர் ஒப்பந்த செவிலியர். இந்த ஒப்பந்த செவிலியர் 2016 - 17 மற்றும் 2020ஆம் ஆண்டு காலகட்டங்களில் வந்தவர்கள். ஒப்பந்த செவிலியருக்கு பணி பாதிப்பு இருக்கக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு ஒப்பந்த காலம் முடிந்தவுடன் அவர்களை மீண்டும் மாவட்ட மருத்துவ சங்கம் மூலம் 14ஆயிரம் ரூபாய் மூலம் 18ஆயிரம் ரூபாய் சம்பளம் உயர்த்தி அவர்களுடைய சொந்த மாவட்டங்களில் பணி அமர்த்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.