தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் 1 கோடி தடுப்பூசிகள் செலுத்தத் திட்டம்' - சென்னை மாவட்ட செய்திகள்

தமிழ்நாட்டில் அக்டோபர் மாதத்திற்குள் ஒரு கோடியே 23 லட்சத்து ஒன்பதாயிரத்து 370 தடுப்பூசிகள் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

'அக்டோபர் மாதம் ஒரு கோடி தடுப்பூசிகள் செலுத்தத் திட்டம்'
'அக்டோபர் மாதம் ஒரு கோடி தடுப்பூசிகள் செலுத்தத் திட்டம்'

By

Published : Oct 1, 2021, 4:18 PM IST

சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மார்பக பரிசோதனை முகாமை மா. சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் ஆயிரத்து 250 இடங்களில் தொடங்கப்பட்டுள்ள வருமுன் காப்போம் சிகிச்சைத் திட்டத்தில் புற்றுநோய்க்கும் சிகிச்சை அளிக்கப்படும்.

'அக்டோபர் மாதம் ஒரு கோடி தடுப்பூசிகள் செலுத்தத் திட்டம்'

நான்காம் கட்ட தடுப்பூசி முகாம் வருகிற அக்டோபர் 3ஆம் தேதி திட்டமிட்டபடி 20 ஆயிரம் இடங்களில் நடைபெறும். தற்போது 24 லட்சத்து 98 ஆயிரத்து 365 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இன்று மாலை ஒன்பது லட்சம் தடுப்பூசிகள் வர உள்ளன.

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற மூன்று கட்ட கரோனா தடுப்பூசி முகாம்களில் ஒரு கோடியே 42 லட்சத்து 66 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அக்டோபர் மாதத்திற்குள் ஒரு கோடியே 23 லட்சத்து ஒன்பதாயிரத்து 370 தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன" என்றார்.

இதையும் படிங்க:'உயர் பணிகளில் இருந்தாலும் மண்ணையும் தாய்மாெழியையும் மறக்காதீர்!'

ABOUT THE AUTHOR

...view details