சென்னை:மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளவர். அதேபோல், இன்று காலை நடைபயிற்சி முடித்து விட்டு தனது வீட்டில் பார்வையாளர்களை சந்தித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. அவரை உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் கிண்டியில் உள்ள கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு சர்க்கரையின் அளவு குறைந்ததால் மயக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனாலும், மேல் சிகிச்சைக்காக சென்னை ஒமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாற்றப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஆஞ்சியோ சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரைத்தனர். அதனைத் தொடர்ந்து அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது.
இது குறித்து ஒமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையின் இயக்குநர் விமலா வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு இன்று அதிகாலை நடைபயிற்சி முடித்து விட்டு பார்வையாளர்களை சந்திக்கும்போது தலைச் சுற்றல் ஏற்பட்டுள்ளது.