சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில், சுகாதார நலப் பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கான செயலி அறிமுக விழா, உலக புகையிலை ஒழிப்பு தினம், மாநில அளவிலான துணை இயக்குனர்களுக்கான தட்டம்மை ரூபெல்லா நோய் நீக்குதல் திட்ட பயிலரங்கம் முதலியன மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், "சுகாதாரத்துறை சார்பில் இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் 110 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் ஸ்டான்லி, தருமபுரி, திருச்சி மருத்துவமனைகளில் மாணவர்கள் சேர்க்கை என்பது முழுமையாக தடை செய்யபட்டு உள்ளது போல தொடர்ச்சியாக செய்தி வெளியாகி வருகிறது ஏற்கனவே அவர்கள் என்ன என்ன குறை சொல்லி மாணவர்கள் தடை செய்துள்ளனர் என தெரிவித்து உள்ளோம், கல்லூரி மருத்துவமனை முதல்வர்கள் சார்பில் ஏற்கனவே விளக்கம் தெரிவித்து NMCக்கு கடிதம் எழுதி உள்ளனர், இது தொடர்பாக வருகின்ற 4ஆம் தேதி காணொலி வாயிலாக பேச்சு வார்த்தை கூட்டமும் நடைபெறுகிறது.
இதுமட்டுமில்லாமல் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளை சந்தித்து பேச தமிழகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் டெல்லி சென்று உள்ளதாகவும், முதலமைச்சர் சென்னை வந்தவுடன் அனுமதி பெற்று தானும் துறையின் செயலாளரும் மத்திய அமைச்சர்களை டெல்லி சென்று சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஏற்கனவே மத்திய அமைச்சர்களிடம் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக கூறிய அவர், மூன்று கல்லூரி மாணவர் சேர்க்கை விவகாரம் மட்டும் இல்லாமல், திருச்சியில் AIMS சித்த மருத்துவ கல்லூரி வழங்கவும், டெல்லியில் புதிய மருத்துவமனை திறப்பு மற்றும் நிதி ஆதாரங்கள் தொடர்பாக மத்திய அமைச்சர்களை சந்திக்க உள்ளதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், இருவிரல் பரிசோதனை தொடர்பாக ஆளுநர் ஒரு கருத்து கூறியவுடன் நாங்கள் அதனை மறுத்து இருந்தோம், தற்போது விசாரணைக்கு சென்ற குழந்தைகள் நல ஆணையரக உறுப்பினர் விசாரணை முடிந்த பின் எந்த ஒரு தவறும் நடைபெறவில்லை என மருத்துவர்களிடம் கூறிவிட்டு ஆளுநரை சந்தித்து தவறு நடந்தது என அறிக்கை அளித்துள்ளார், அது மட்டும் இல்லாமல் தவறு செய்த மருத்துவ துறை அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் இது அதிகார போதையில் கூறுவது சரி என ஏற்றுகொள்ள முடியாது.
அவர் மருத்துவர்களிடம் என்ன பேசினார் என்ற ஆடியோ ஆதாரம் உள்ளது, குழந்தை வாழ்க்கையை வைத்து அரசியல் செய்யகூடாது என்றே நாங்கள் அமைதியாக உள்ளோம் தொடர்ந்து அவர் இப்படி பேசினால் அதாரத்தை வெளியிட தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் புதிய பல் மருத்துவ கல்லூரிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதாகவும், இந்த ஆண்டு புதுக்கோட்டை மருத்துவமனையில் 50 மாணவர்கள் சேர்க்கையுடன் கல்லூரி துவங்கப்படும் என்றும் முதலமைச்சர் இதனை திறந்து வைப்பார் என்றும் தெரிவித்தார் அதேபோல 11 புதிய செவிலியர்கள் பயிற்சி கல்லூரி துவங்கவும் மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க:World Tobacco Day: புகையிலைக்கு அடிமையாகும் சிறுவர்கள்.. ஆய்வு முடிவுகளில் வெளியான அதிர்ச்சி தகவல்!