சென்னை: நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவருக்கும் ஜூன் மாதம் திருமணம் நடந்தது. 4 மாதங்களில் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தததாக விக்னேஷ் சிவன் அறிவித்தார். இதுதொடர்பான புகைப்படத்தையும் இருவரும் வெளியிட்டிருந்தனர். அதன்பின் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது தெரியவந்தது. அதேசமயம் விதிமுறைகளை மீறி அவர்கள் குழந்தை பெற்றதாக சர்ச்சையும் எழுந்தது.
இந்த வாடகைத்தாய் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். வாடகைத்தாய் விவகாரம் குறித்து விசாரிக்க சுகாதாரத்துறை இணை இயக்குநர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீக்காயப் பிரிவினை பார்வையிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதன்பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது குறித்து பல்வேறுத் துறைகள் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். தீபாவளிப் பண்டிக்கைக்கு தீக்காயம் ஏற்பட்டால் முன்பு கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மட்டும் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது.