சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு சைதாப்பேட்டை தொகுதியில் நலத்திட்ட உதவிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் 5,300 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
தரமற்ற முகக்கவசங்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "கரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கு முகக்கவசங்கள் தான் முழுமையான தீர்வு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
கடந்த ஆட்சியில் திமுக சார்பில் முகக்கவசங்களை இலவசமாக வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தோம். அப்பொழுது முகக்கவசங்கள் தேவையில்லை என ஆட்சியாளர்கள் மறுத்தனர். அதன்பின்னர் வருவாய்த்துறை சார்பில் முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. அவை தரமற்ற முகக்கவசங்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நல்ல பனியன் துணியால் செய்யப்பட்ட முகக்கவசங்கள் தான் பாதுகாப்பனது. கடந்தமுறை காடா துணியால் முகக்கவசங்கள் வழங்கியது பயனற்றதாகும். அது சம்பந்தமாக தற்போது விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.