தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டெல்டா பிளஸ் வைரஸ் வேறு யாருக்கும் பரவாயில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றினால் செவிலியர் ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்ததில் வேறு யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

டெல்டா பிளஸ் வைரஸ் வேறு யாருக்கும் பரவாயில்லை
டெல்டா பிளஸ் வைரஸ் வேறு யாருக்கும் பரவாயில்லை

By

Published : Jun 24, 2021, 3:38 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அதேபோல் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடும் பணிகள் பத்து நாள்களில் நிறைவு பெறும்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி போன்ற சுற்றுலா தலங்களில் தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடைபெற்றுவருகிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த காட்டூர் கிராமத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

டெல்டா பிளஸ் வைரஸ் வேறு யாருக்கும் பரவாயில்லை

முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 40 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 1,296 மருத்துவமனைகளில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 20 ஆயிரத்து 936 பேர் பயனடைந்துள்ளனர். இதற்காக ரூபாய் 266 கோடியே 48 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது.

டெல்டா பிளஸ் வைரஸ் வேறு யாருக்கும் பரவாயில்லை

முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் சேர்க்கப்பட்டு 423 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளன. டெல்டா பிளஸ் வைரஸ் சென்னை கோட்டூர் பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவருக்கு கண்டறியப்பட்டது. அவர் செவிலியாக பணியாற்றிவருகிறார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்ததில் வேறு யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை.

டெல்டா பிளஸ் வைரஸ் பாதிக்கப்பட்ட செவிலியரும் வீட்டிலேயே லேசான அறிகுறியுடன் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார். இவருக்கு நோய் தொற்று எவ்வாறு வந்தது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து கரோனா வைரஸ் தொற்றை கருத்தில் கொண்டு முதலமைச்சர் முடிவு எடுப்பார்" என்றார்.

இதையும் படிங்க: மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

ABOUT THE AUTHOR

...view details