தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஐ லவ் ஆவடி' - மக்களுடன் அமைச்சர் செல்ஃபி - ஆவடி மாநகராட்சி திறப்பு விழா

சென்னை: தமிழ்நாட்டிலுள்ள கோயில்களையும் புராதனச் சின்னங்களையும் எந்த ஒரு காரணத்துக்காகவும் மத்திய அரசாங்கத்திற்கு அதிமுக அரசு விட்டுக் கொடுக்காது என்று அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார்.

அமைச்சர் கே.பாண்டியராஜன்
அமைச்சர் கே.பாண்டியராஜன்

By

Published : Mar 10, 2020, 5:58 PM IST

சென்னை ஆவடி மாநகராட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சர் கே.பாண்டியராஜன் கலந்து கொண்டு, மழைநீர் சேகரிப்பு சிறப்பாக சேகரித்து வைத்துள்ள குடியிருப்புவாசிகளுக்கு ஆவடி மாநகராட்சி சார்பாக இலவச மிதிவண்டிகளைப் பரிசாக வழங்கினார். அரசுப்பள்ளிகளில் ஆவடி மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பேரீட்சை சிரப் வழங்கப்பட்டது.

ஆவடி மாநகராட்சி பொதுப் பயன்பாட்டுத் திறப்பு விழா

இதைத்தொடர்ந்து பருத்திப்பட்டு பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை பார்வையிட்டு, அமைச்சர் உடற்பயிற்சி மேற்கொண்டார். ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள 'ஐ லவ் ஆவடி' என்கிற செல்ஃபி மையத்தைத் திறந்து வைத்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.பாண்டியராஜன், 'தமிழ்நாட்டிலுள்ள பொக்கிஷங்களான புராதனச் சின்னங்கள், கலை பண்பாட்டு நினைவு சின்னங்கள் போன்றவற்றை எந்த காலத்திலும் மத்திய அரசுக்கு அதிமுக அரசு விட்டுக் கொடுக்காது.

அமைச்சர் கே.பாண்டியராஜன்

திமுக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இதை தவறாகப் புரிந்து கொண்டுள்ளார். திமுக ஆட்சிக்காலத்தில் கோயில்களை தொல்லியல் துறை சார்பில், சரியாக கவனிக்காமல் இருந்தனர். அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் 39 ஆயிரம் கோயில்களை சிறப்பாக கவனித்து வருகிறது. மேலும் கூடுதலாக கவனம் செலுத்தி, புராதனச் சின்னங்களைப் பாதுகாத்து வருவதாக' தெரிவித்தார்.

இதையும் படிங்க:முகமூடியுடன் சேற்றில் ஹோலி கொண்டாட்டம் - உற்சாகத்தில் மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details