சென்னை :வானகரத்தில் இந்திய அளவில் முதல்முறையாக அப்போலோ மருத்துவமனையில் அதிநவீன simulation (உருவகப்படுத்துதல்) மையம் தொடக்க நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பங்கேற்று மையத்தைத் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், 'மெகா தடுப்பூசி முகாம் மூலமாக நிர்ணயிக்கப்பட்ட ஒருநாள் இலக்கை விட கூடுதலாக 1 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. பல்வேறு உலக நாடுகள் 18 வயதுக்குக்கீழ் உள்ளவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
மக்களநல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஒன்றிய அரசும் தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும். 12 முதல் 18 வயதுள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
இதுபோன்ற சூழல் இருக்கும் நிலையில் தடுப்பூசிகளை ஒன்றிய அரசு ஏற்றுமதி செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது பொருத்தமற்ற ஒன்றாக உள்ளது. அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை அடைய தேவையானதை செய்யுங்கள். பின்னர் ஏற்றுமதியை வைத்துக்கொள்ளுங்கள்.
நீட் விலக்கு மசோதா
தமிழ்நாட்டில் 1 முதல் 8 வரை பள்ளிகள் திறப்பது குறித்து அடுத்த ஊரடங்கு ஆலோசனைக்குப் பின்னர் முதலமைச்சர் அறிவிப்பார். தற்போது புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஆளுநர் நீட் விலக்கு மசோதாவிற்கு விரைவாக ஒப்புதல் வழங்குவார் என நம்புகிறேன். இதன்பின்னர் குடியரசுத் தலைவருக்கு உடனடியாக அனுப்பப்படும்'' என உறுதியளித்தார்.
இதையும் படிங்க : மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்புமனு தாக்கல்