தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட தமிழ் மாணவர்கள் எந்த நாட்டிலும் படிப்பைத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் மா.சு

உக்ரைனில் மருத்துவப் படிப்பு படித்த மாணவர்கள், இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் தங்களது படிப்பைத் தொடர தமிழ்நாடு அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்குப் பதில் அளித்துள்ளார்.

உக்ரைனிலிடருந்து மீட்கப்பட்ட தமிழ் மாணவர்கள் எந்த நாட்டிலும் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்படும் - மா.சு
உக்ரைனிலிடருந்து மீட்கப்பட்ட தமிழ் மாணவர்கள் எந்த நாட்டிலும் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்படும் - மா.சு

By

Published : Apr 8, 2022, 4:30 PM IST

சென்னை: தலைமைச்செயலகத்தில் உக்ரைனிலிருந்து தமிழ்நாடு வந்த மாணவர்கள் தொடர்ந்து, தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பைத்தொடர சட்டப்பேரவையில் எழிலன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, செல்வப்பெருந்தகை, ஜி.கே மணி, சிந்தனைச்செல்வன், ராமச்சந்திரன், நாகை மாலி உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர்.

இதற்கு பதிலளித்துப் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், 'உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் அரசிடம் உக்ரைனில் இருக்கும் பாடத்திட்டம் போன்று ஒரு சில நாடுகளில் இருப்பதாகவும் எனவே அந்த கல்லூரிகளில் தங்களுடைய படிப்பை மேற்கொள்ளுமாறும், அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் எனவும் பல மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
அதைத்தொடர்ந்து முதலமைச்சரும் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் இதுகுறித்து கேட்டறிந்தார்.

தற்போது இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியுறவுத்துறை தரப்பில் இருந்து போலந்து, செக் குடியரசு போன்ற நாடுகளில் உக்ரைனில் இருப்பது போன்றே பாடத்திட்டம் இருப்பதாகத் தெரிவித்தார்கள். மாணவர்கள் இந்தியாவில் மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் தங்களது படிப்பைத்தொடர தமிழ்நாடு அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வன்னியர் இட ஒதுக்கீடு: புள்ளி விவரங்களை சேகரிக்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details