தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இஸ்லாமியர்களுக்கு அதிமுக துணை நிற்கும்' - அமைச்சர் பாண்டியராஜன் உறுதி! - minister ma.pa.pandiarajan press meet

சென்னை: இஸ்லாமியர்களுக்கு அதிமுக அரசு எப்போதும் துணை நிற்கும் என்று தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் தெரிவித்தார்.

ministr ma pa paqndiarajan

By

Published : Nov 10, 2019, 7:19 PM IST

இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த தினமான 'மிலாடி நபி' திருநாளை இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்த நன்னாளை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் முகமது நபிகள் பிறந்த நாளையொட்டி இஸ்லாமிய முன்னேற்றக் கூட்டமைப்பு சார்பில், மிலாது நபி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தினை தமிழ் மொழி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

முகமது நபி பிறந்த தினக் கொண்டாட்டம்

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "அதிமுக அரசு இஸ்லாமியர்களுக்கு எப்போதும் துணை நிற்கும். சமூக நல்லிணக்கத்திற்காக நபிகள் பிறந்த நாளில் இஸ்லாமியர்கள் ஊர்வலமாக செல்கின்றனர். இஸ்லாமியர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் மனு அளிக்கலாம் - அதிமுக அறிவிப்பு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details