உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கூடுதலாக வேளாண்மைத் துறை ஒதுக்கீடு - வேளாண்மைத் துறை ஒதுக்கீடு
![உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கூடுதலாக வேளாண்மைத் துறை ஒதுக்கீடு Minister KP Anbalagan have additional ministry](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9393975-thumbnail-3x2-knk.jpg)
20:09 November 01
சென்னை: உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகனுக்கு கூடுதல் பொறுப்பாக வேளாண்மை துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு ஆளுநரின் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரையின்படி, வேளாண்மை, வேளாண்மை பொறியியல், வேளாண்மை கூட்டுறவு சேவை சங்கங்கள், தோட்டக்கலை துறை, சர்க்கரை துறை மேம்பாடு மற்றும் தரிசு நிலங்கள் மேம்பாடு ஆகியவற்றை அமைச்சர் துரைக்கண்ணு கவனித்து வந்தார்.
இந்த துறைகளை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் கூடுதலாக கவனிப்பார். எனவே கே.பி அன்பழகன் உயர்க்கல்வி மற்றும் வேளாண்மை துறை அமைச்சர் என அழைக்கப்படுவார் என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்!