சென்னை:இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் முத்துராஜா, "கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கோவை தெற்கு தொகுதியில் மசால் லே அவுட் பகுதியில் கிட்டத்தட்ட 300 குடும்பங்கள் உள்ளன.
நீண்ட நாட்களுக்கு முன்னதாக அமைக்கப்பட்ட கால்வாய் ஆக்கிரமிப்பு ஒரு புறம், கழிவுநீர் கலந்து வரக்கூடிய நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனை சுகாதாரமாக மாற்றித் தர வேண்டும்", என கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, "கோவை மாநகராட்சி மூலமாக இதற்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டது. அந்த கால்வாய் ஓரத்தில் மக்கள் குடியிருந்து வருகிறார்கள். அவர்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலமாக அவர்களுக்கு வேறு இடம் மாற்றி கொடுத்து தான் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.