தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Chennai rain; நீரைத் தேங்கவிடமாட்டோம் - அமைச்சர் கே.என்.நேரு

சென்னையில் கனமழை பெய்தாலும் நீர் தேங்காத வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

Minister Nehru press meet
'தண்ணீர் தேங்கவிடமாட்டோம்'

By

Published : Nov 24, 2021, 8:33 PM IST

சென்னை: விமான நிலையத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழை அதிகமாகப் பெய்யும் மாவட்ட ஆட்சியர்களுடன் பேசினார். எங்கும் நீர் தேங்காதவாறு அனைத்து வசதிகளும் செய்ய உத்தரவிட்டு உள்ளார்.

சென்னை மாநகராட்சியில் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட இடங்கள் நன்றாகத் தெரியும். அந்த இடங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பம்பு வைக்கப்பட்டு, உடனடியாக நீரினை அகற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

700 இடங்களில் பம்புகள்

'தண்ணீர் தேங்கவிடமாட்டோம்'

கனமழை இருக்கக்கூடிய இடங்களில் நீர் தேங்காதவாறு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.

700 இடங்களில் பம்புகள் வைக்கப்பட்டு உள்ளன. மெட்ரோ குடிநீர் வாரியத்தின் மூலம் 500 பம்புகள் உள்ளன. அடைப்புகளை அகற்ற 40 ஜெட்ராடுகள் புதிதாக உள்ளன" எனக் கூறினார்.

இதையும் படிங்க:மீண்டும் தள்ளிவைக்கப்பட்ட 'மாநாடு' - வலியோடு தெரிவித்த சுரேஷ் காமாட்சி

ABOUT THE AUTHOR

...view details