தமிழ்நாடு

tamil nadu

ஜெயக்குமார் போகும் கன்னித்தீவு கொளத்தூர் அல்ல - அமைச்சர் கே.என்.நேரு

By

Published : Nov 4, 2022, 5:56 PM IST

தொடர் கனமழையால் தொற்று நோய் பரவாமல் தடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தல்படி மாபெரும் மருத்துவ முகாமை அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மருத்துவ முகாம்
மருத்துவ முகாம்

சென்னை:கொளத்தூர் தொகுதி அம்பேத்கர் நகர், மூகாம்பிகா கோயில் சந்திப்பு, வெற்றி நகர், திரு.வி.க.நகர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதியில் மழைக்கால மருத்துவ முகாம்களை அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர். அமைச்சர்கள் உடன் சென்னை மாநகர மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

மருத்துவ முகாமினை தொடங்கி வைத்த பின் அமைச்சர் கே.என்.நேரு, ’’அதிமுக ஆட்சியில் எந்த மழைநீர் வடிகால் பணிகளும் நடைபெறவில்லை. அதிமுக ஆட்சியில் பணிகள் நடைபெற்றிருந்தால் கடந்தாண்டு மழையின்பொழுது பாதிப்பு ஏற்பட்டிருக்காது.

அதிமுக ஆட்சியில் திட்டங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டிருந்தாலும், நிறைவேற்றப்பட்டது திமுக ஆட்சியில் தான். தனது இருப்பைக்காட்ட வேண்டும் என்பதற்காக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசி வருகிறார். கொளத்தூர் தொகுதி கன்னித்தீவு தொகுதியா என ஜெயக்குமார் விமர்சித்தார். அவர் போகும் கன்னித்தீவு இது அல்ல” என கே.என்.நேரு விமர்சனம் செய்தார்.

இதையும் படிங்க:துரோக மாடல் ஆட்சி: ஆவின் பால் விலை உயர்வைக்கண்டித்து ஓபிஎஸ் விமர்சனம்

ABOUT THE AUTHOR

...view details