தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனைத்து சான்றிதழ்களையும் செல்போன் மூலமாக விண்ணப்பிக்க நடவடிக்கை - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் - tn assembly

சாதி, வருமான, இருப்பிடம் போன்ற சான்றிதழ்களை செல்போன் மூலமாகவே விண்ணப்பித்து உரிய காலத்துக்குள் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.

By

Published : Apr 18, 2022, 9:54 PM IST

சென்னை:வருவாய்த்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், 'இ-சேவை மையத்தில் பொதுமக்கள் விண்ணப்பித்தாலும், மீண்டும் சான்றிதழ் கோரி தாசில்தார், வருவாய் அலுவலர்களை சந்திக்க அறிவுறுத்துகிறார்கள். இதைத் தவிர்க்கும் விதமாக துறை முழுவதும் கணினி மயமாக்கப்படும்.

சாதி, வருமான, இருப்பிடம் போன்ற சான்றிதழ்களை செல்போன் மூலமாகவே விண்ணப்பித்து உரிய காலத்துக்குள் சான்றிதழைப்பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வருவாய்த்துறையை முழுவதும் கணினி மயமாக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதியோர் உதவித்தொகை திட்டத்தின்கீழ், இந்தாண்டு 3 லட்சம் பேருக்கு உதவித்தொகை வழங்கப்படும். வருவாய்த்துறையில் வி.ஏ.ஓ உள்ளிட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். மேற்குறிப்பிட்ட சான்றிதழ் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்காத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:முதலில் எடப்பாடியை கண்டியுங்கள்; ஓபிஎஸ்க்கு தங்கம் தென்னரசு அறிவுரை

ABOUT THE AUTHOR

...view details