சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று(ஏப்.13) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அத்துறையின் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், "ஈரோடு மாவட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வீட்டிற்கு பட்டா இல்லை. இதை உறுப்பினர்கள் நம்புவீர்களா? - 'என் வீட்டிற்கு பட்டா வழங்குங்கள்' என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கேட்டார். பெரியார் வீட்டிற்கே பட்டா இல்லை. 7,000 குடும்பங்கள் அவ்வாறான நிலையில் உள்ளன.
தேர்தல் நேரத்தில் மக்கள் பட்டா வழங்க கோரிக்கை விடுத்தனர். எப்படி இவ்வளவு குடும்பங்களுக்கு பட்டா விடுபட்டுப்போனதென்று முதலமைச்சருக்கே வியப்பாகிப் போய்விட்டது. அனைவரின் வீடுகளுக்கும் தற்போது பட்டா வழங்கப்படவிருக்கின்றன. தினந்தோறும் பட்டா வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.