தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காட்டுநாயக்கர் சமூகத்தினருக்கு ST சாதிச்சான்றிதழ்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியது என்ன? - Schedule Tribe Caste certificate

காட்டு நாயக்கர் வகுப்பு மக்களுக்கு பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் முறையான விசாரணையின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 17, 2023, 5:11 PM IST

சென்னை:கடந்த மார்ச் 20ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், மறுநாள் 21ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இன்று (ஏப்.17) துறை ரீதியான மானியக்கோரிக்கை குறித்த விவாதம் நடந்தன. இந்நிலையில், இன்றைய மானியக் கோரிக்கையின் போது சட்டப் பேரவையில் வினாக்கள் - விடைகள் நேரத்தில், திருவொற்றியூர் தொகுதி, 2வது வார்டு, இராமமூர்த்தி நகரில் வசிக்கும் காட்டு நாயக்கர் வகுப்பு மக்களுக்கு பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் வழங்க அரசு முன்வருமா? என சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், 'சாதிச் சான்றிதழ் வழங்குவதில் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது. தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கும் பட்சத்தில் முறையான விசாரணையின் அடிப்படையில் சாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று பதிலளித்தார்.

மேலும் 'சட்டமன்ற உறுப்பினர், இது குறித்து வருவாய் கோட்டாட்சியரை (RDO) சந்தித்துப் பேசி உள்ளார்’ எனக் கூறிய அவர், ’மொத்தம் 35 காட்டு நாயக்கர் குடும்பங்களில், 25 குடும்பங்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதம் இருக்கக்கூடிய குடும்பங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க சிறப்பு முகாம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்’ குறிப்பிட்டார்.

இதையும் படிங்க:சாதி சான்றிதழ் மனுவை நிராகரித்த அதிகாரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!

குறிப்பாக, வடசென்னை பகுதியில் மொத்தம் வசிக்கக்கூடிய 282 குடும்பங்களுக்கு Schedule Tribe - (ST) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அதில் குறிப்பாக, 32 குடும்பங்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இருந்தபோதிலும், இந்த சமூகத்தில் பலர் Migrationஆக வருவதால் சாதிச் சான்றிதழ் சரியாக இல்லை எனவும், சான்றிதழ் வழங்கும் அதிகாரிகளுக்கும் பிரச்னை உள்ளதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக, மத்திய, மாநில அரசுக்கு வேலைக்குச் செல்லும்போது, பிரச்னை ஏற்படுவதாக சுட்டிக்காட்டிய அவர், அப்போது மீண்டும் ஆர்டிஓ அலுவலகத்திற்கு வருகை தந்து தவறான சான்றிதழ் வழங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலை ஏற்படுவதாகவும், ரத்தம் சம்பந்தமான உறவுகள் இருந்தால் சான்றுதல் வழங்குவதில் பிரச்னை இல்லை என்றார்.

அத்துடன் குறிப்பாக, ’விளிம்பு நிலையில் வாழும் மக்களுக்கு முறையாக சான்றிதழ் வழங்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம் எனவும், முறையான ஆவணங்கள் இருந்தால் சான்றிதழ் வழங்கப்படும்' எனவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்களில் இருந்து மேற்படிப்புக்குச் செல்லும் பல குழந்தைகளின் கனவு இந்தச் சாதி சான்றிதழால் நீண்ட நாட்களாக மறுக்கப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. இதனால், தங்களின் மேற்படிப்பு குறித்த கனவுகளை நிறைவேறாமல் உள்ளதாகவும் இத்தகைய சிரமங்களை விரைந்து நீக்கி சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த சமூகத்தைச் சேர்ந்த பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அனைத்து அரசு துறைகளும் டிஜிட்டல் மயம் ஆகிறது; சட்டப்பேரவையில் அமைச்சர் பி.டி.ஆர் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details