தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

TN Rains: கனமழை எச்சரிக்கை; ஆட்சியர்களுக்கு அமைச்சர் முக்கிய அறிவுரை! - TN Rain Update

கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்த்திட தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலான்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 19, 2023, 3:28 PM IST

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாகத் தமிழ்நாட்டில் நேற்று (18.06.2023) முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மழைக்காலங்களில் பேரிடர்களை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள ஆயத்த பணிகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று (19.06.2023) மாநில அவசரக் கால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு செய்தார்.

தென்மேற்கு பருவமழைக் காலத்தில், 01-06-2023 முதல் 19-06-2023 முடிய 25.9 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பான மழை அளவைக் காட்டிலும் 22 விழுக்காடு குறைவு ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 27 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாநில சராசரி 11.10 மி.மீ. ஆகும். சென்னை மாநகராட்சியில் கடந்த 24 மணி நேரத்தில் (18.06.2023) 8.30. முற்பகல் - 19.06.2023 8.30 (முற்பகல்) 4213.50 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 78,028 மி.மீ. ஆகும்.

வானிலை முன்னெச்சரிக்கை:19.06.2023 - கனமழை - காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், ஒரு சில பகுதிகளில், இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. 20.06.2023 முதல் 22.06.2023 - தமிழ்நாட்டில் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும், ஒரு சில பகுதிகளில், இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:19.06.2023 மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். வட தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். 20.06.2023 முதல் 22.06.2023 மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். தமிழகத்தில், பரவலாகப் பெய்து வரும் கன மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் உள்ள மழை நீரை வெளியேற்றும் பணியை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின் பேரில், சென்னை மாநகராட்சி உட்படத் தொடர்புடைய மாநகராட்சிகளும், மாவட்ட நிருவாகங்களும் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சி:சென்னை மாநகராட்சியில் கடந்த 24 மணி நேரத்தில் (18.06.2023 8.30. முற்பகல் முதல் 19.06.2023 8.30 முற்பகல் வரை) 4213.50 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதன் சராசரி 78.03 மி.மீ. ஆகும். பல பகுதிகளில் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் 83 இடங்களில் மழை நீர் தேங்கிய நிலையில் 28 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டு விட்டது. மீதமுள்ள இடங்களில் தேங்கியுள்ள மழை நீர் விரைந்து அகற்றப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில், 21 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை. ஒரு சுரங்கப்பாதையில் மழைநீர் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் 22 அதிக திறன் கொண்ட நீர் உறிஞ்சும் இயந்திரங்கள், மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் பலத்த காற்று காரணமாக 6 இடங்களில் மரங்கள் விழுந்த நிலையில் அவை உடனடியாக அகற்றப்பட்டு விட்டன. மாநகராட்சி பகுதிகளில் உள்ள 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கத்திப்பாரா மற்றும் ஆற்காடு சாலையில் மழை நீர் தேங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 2 குழுக்கள் அங்கு விரைந்துள்ளன.

முன்னெச்சரிக்கை:கனமழையின் காரணமாக திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, வேலூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிவிக்கையில் இன்று (19.06.2023) 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்ற தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்த்திடத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி, பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்களில் ஜே.சி.பி. இயந்திரங்கள், மரம் அறுப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்களுடன் பல்துறை மண்டல குழுக்களையும், மீட்புக் குழுக்களையும், நிவாரண முகாம்களையும் தயார் நிலையில் வைத்திட மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேரிடர் தொடர்பான தகவல்களை துறை அலுவலர்களுக்கும், பொது மக்களுக்கும் தெரிவிக்கும் வகையில், மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையமும், மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் செயல்பட்டு வருகின்றன. பொதுமக்கள் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையத்தை முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்ல தொலைப்பேசி வாயிலாகவும், வாட்ஸ் அப் எண். 94458 69848 மூலமாகவும் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Chennai Rains: மழைநீர் தேங்கியதால் கிண்டி கத்திப்பாராவில் போக்குவரத்துக்குத் தடை; தானியங்கி மோட்டாரை சரி செய்ய கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details